நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு... முழு ஆண்டு தேர்விலும் மாற்றம்!
Tamil Nadu Pudukottai Local Holiday On April 6th: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Pudukottai Local Holiday On April 6th: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 6ஆம் தேதியான நாளை அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டு கல்வியாண்டு நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிந்துது, கோடை விடுமுறையில் இருக்கின்றனர். தொடர்ந்து, 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு முடிவடைகிறது.
மேலும், 4 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து, 1,2,3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாணவர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கிடையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குஷியான செய்தி வந்துள்ளது. அதாவது, ஏப்ரல் 6 (நாளை) புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் நாளை (ஏப்ரல் 6) அன்று தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த தேர்த் திருவிழாவை காண, அம்மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட கருவூலகம், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 6ஆம் தேதியான நாளை பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 18ஆம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு தேதியும் மாவட்ட நிர்வாகம் மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 6ஆம் தேதி நாளை உள்ளூர் விடுமுறை இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 6) புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் குஷியில் உள்ளனர். ஏற்கனவே, சனி, ஞாயிறு என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதியான நாளையும் விடுமுறை இருப்பதால் புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில், தேர்வுகளுக்கு தயாராகவும் இந்த விடுமுறை உதவுக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.