... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு

ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு

சென்னை: ​பாஜக பொறுப்​பு​களில் இருந்து ஏஎன்​எஸ். பிர​சாத் நீக்​கப்​பட்ட உத்​தரவு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. அவருக்கு மீண்​டும் மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்பை வழங்கி நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி என்​டிஏ கூட்​ட​ணி​யில் இணைவது தொடர்​பாக தவெக​விடம் திரைமறை​வில் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​வ​தாக சமீபத்​தில் தகவல்​கள் வெளி​யாகின. இந்த சூழலில், தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் ஓர் அறிக்கை வெளி​யிட்​டார்.

‘தமிழக அரசி​யலில் விஜய் ஒரு மாபெரும் சரித்​திர நாயக​னாக உரு​வெடுக்​க​வும், மக்​கள் நல அரசி​யலை முன்​னெடுக்​க​வும் இதுவே சரி​யான தருணம். என்​டிஏ கூட்​ட​ணிக்கு வந்​தால், அவருக்கு தகு​தி​யான இடமும், உரிய மரி​யாதை​யும் நிச்​ச​யம் வழங்​கப்​படும்’ என்று அந்த அறிக்​கை​யில் அவர் தெரி​வித்​திருந்​தார். கட்​சி​யின் மேலிட அனு​மதி இன்​றி, தன்​னிச்​சை​யாக விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்​தது சலசலப்பை ஏற்​படுத்​தி​யது.

இதைத் தொடர்ந்​து, கட்​சி​யின் கட்​டுப்​பாட்டை மீறிய​தாக, அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் ஏஎன்​எஸ். பிர​சாத்தை நீக்கி மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், அந்த ஒழுங்கு நடவடிக்​கையை ரத்து செய்​து, அவருக்கு மீண்​டும் மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்பை வழங்கி நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத், கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளான​தால் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டிருந்​தார். தற்​போது அவர் மீதான நீக்​கம் ரத்து செய்​யப்​படு​கிறது. அவர் மீண்​டும் கட்சி மற்​றும் தேர்​தல் பணி​களை மிக​வும் சிறப்​பான முறை​யில் மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News