... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#நெல்லையில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்

நெல்லையில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் இன்று காலை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டு உள்ள பொதுக்கூட்ட பந்தலுக்கு வருகிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதுதவிர நகர்வலமும் (ரோடு ஷோ) வருகிறார். அதாவது பிரசாரத்தை முடித்துக்கொண்டு 4 வழிச்சாலை வழியாக நெல்லை தாழையூத்துக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், கே.டி.சி. நகர் வழியாக சென்று ரசிகர்கள், தொண்டர்களுக்கு கையசைத்து ஆதரவு திரட்டுகிறார்.

Source : Malaimalar

2 hours ago

Home Flash News