... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
சூர்யவன்ஷி, ஜூரெல் ருத்ர தாண்டவம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

சூர்யவன்ஷி, ஜூரெல் ருத்ர தாண்டவம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் 16-ஆவது போட்டியில் ராஜதஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பில் சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் பட்டிதார் 40 பந்துகளில் 63 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.

இதன் காரணமாக ஆர்.சி.பி. அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய் மற்றும் ப்ரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் சந்தீப் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 202 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடினார். இவர் 28 பந்துகளில் 78 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய துருவ் ஜூரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் கடைசி வரை களத்தில் இருந்த ஜூரெல் 43 பந்துகளில் 81 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குவித்தார்.

Source : Malaimalar

1 hour ago

Home Flash News