... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

போபால்: உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜில் கடந்த ஆண்டு மகா கும்​பமேளா நடை​பெற்​றது. இதில் மத்​திய பிரதேச மாநிலம் கார்​கோன் மாவட்​டத்​தைச் சேர்ந்த மோனலிசா, மணி​கள் விற்​பனை செய்​தார். இது தொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களில் பரவி மக்​களின் இதயங்​களைக் கவர்ந்​தார். இந்​நிலை​யில் மோனலி​சா, பர்​மன் கான் என்பவரை கடந்த மார்ச் 11-ம் தேதி திரு​மணம் செய்து கொண்​டார். இது மதம் கடந்த திரு​மண​மாக பார்க்​கப்​பட்​டாலும், மோனலி​சா​வின் வயது குறித்து புகார் எழுந்​தது. இந்​நிலை​யில், தேசிய பழங்​குடி​யினர் ஆணை​யம் நடத்​திய விசா​ரணை​யில், திரு​மணத்​தின்​ போது மோனலிசா சட்​டப்​பூர்வ வயதை அடை​யாதவர் (மைனர்) என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, மத்​தி​யப் பிரதேசத்​தின் மகேஷ்வர் காவல் நிலை​யத்​தில் பர்​மன் கான் மீது போக்​சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் பார​திய நியாய சன்​ஹிதா (பிஎன்​எஸ்) மற்​றும் எஸ்​சி/எஸ்டி (வன்​கொடுமைத் தடுப்​பு) சட்​டம் உள்​ளிட்ட பல பிரிவு​களின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. என்​சிஎஸ்டி தலை​வர் அந்​தர் சிங் ஆர்யா தலை​மை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், மோனலிசா ‘பார்த்​தி' பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​பதும் மருத்​து​வ​மனை பதிவு​களின்​படி, அவர் டிசம்​பர் 30, 2009 அன்று பிறந்​தார் என்​பதும் உறுதி செய்​யப்​பட்​டது. திரு​மணத்​தின் போது அவருக்கு 16 வயது மட்​டுமே ஆகி​யிருந்​தது தெரிய​வந்​துள்​ளது. மோனலிசா திரு​மணம் கேரளா​வில் உள்ள ஒரு உள்​ளூர் கிராம பஞ்​சா​யத்து அலு​வல​கத்​தில் போலி​யான ஆவணங்​களின் அடிப்​படை​யில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. தம்​ப​தி​யினர் வழங்​கிய ஆதார் விவரங்​களை நம்​பிய​தாக திரு​மணம் நடந்த கோயில்​ நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News