... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
சுற்றுலாப் பயணிகள் அட்டகாசம்: ஆடிப்போன தாய்லாந்து அரசு; டிராவலுக்கு வேட்டு வைக்க முடிவு

சுற்றுலாப் பயணிகள் அட்டகாசம்: ஆடிப்போன தாய்லாந்து அரசு; டிராவலுக்கு வேட்டு வைக்க முடிவு

சுற்றுலாப் பயணிகளின் சில நடவடிக்கைகளால் தாய்லாந்து அரசு விழிப்பிதுங்கியுள்ளது. இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.

தாய்லாந்திற்கு செல்ல இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை. வெறும் பாஸ்போர்ட் இருந்தால் போதும் அந்த நாட்டில் நீங்கள் தாராலமாக உலா வரலாம். ஆனால், தற்போது தாய்லாந்தில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா இல்லாத நுழைவுச் சலுகைகளை அந்நாட்டு அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. 

ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுரசாக் பஞ்சரோன்வோராகுல் இது குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தற்போதைய விசா விலக்குக் கொள்கைகள் நடைமுறைப் பயண முறைகளுக்கும், அரசின் கொள்கை இலக்குகளுக்கும் பொருந்துகிறதா என்பதை அரசு ஆய்வு செய்து வருகிறது.

தாய்லாந்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 சதவீதம் பேர் 1 முதல் 30 நாட்கள் மட்டுமே தங்கியிருக்கிறார்கள். ஆனால், தற்போதைய விசா இல்லாத விதிகளின்படி அவர்களுக்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குறுகிய காலமே தங்கினாலும், ஒரு சிறிய பகுதியினர் 60 நாட்களை முழுமையாகப் பயன்படுத்துவதோடு, சுற்றுலா நோக்கத்தைத் தாண்டி பிற செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 60 நாட்கள் விசா இல்லாத அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த 60 நாள் கால அவகாசம் தற்போது தேவையானதுதானா? என்பது குறித்து விசா கொள்கைக் குழு தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறது என்றார். அதிகாரிகளின் ஆய்வின்படி, சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் சிலர், விசா விதிகளுக்கு மாறாகத் தங்களின் தங்கும் காலத்திலேயே வேலை செய்வது அல்லது பிற பணிகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய விசா நடைமுறைகள் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க போதுமானதாக இல்லை என்பதால், கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், உண்மையான மற்றும் தரமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கும் காலத்தைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது விசா விலக்கு சலுகை பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பட்டியலும் மறுபரிசீலனை செய்யப்படும். 

அந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் எந்த அளவுக்குத் தகுதியானவர்கள் மற்றும் அவர்கள் தாய்லாந்தின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறார்களா? என்பது ஆய்வு செய்யப்படும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, தரமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதே அரசின் முதன்மையான இலக்காகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source : Indian Express Tamil

1 hour ago

Home Flash News