Select Location
All Locations
State
Region
City / District
சென்னையில் இன்று 3 இடங்களில் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி... எங்கெங்கே தெரியுமா..??

சென்னையில் இன்று 3 இடங்களில் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி... எங்கெங்கே தெரியுமா..??

தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை துவங்கினார். அவர் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார். பின்னர் பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுத்தும் காரைக்குடியில் அனுமதி கொடுத்த நேரத்தை தாண்டியதால் விஜயால் பேச முடியவில்லை.

அவர் வெளிமாவட்டங்களில் பிரசாரத்தை முடித்த நிலையில், தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்ரல் 15) மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். தவெகவினர் விஜயை வரவேற்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Smacy News 2 days ago
Home Flash News