தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு - அண்ணா அறிவாலயம், கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.