Select Location
All Locations
State
Region
City / District
தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்​லாந்​தில் நடை​பெற்று வரும் தண்ணீர் திருவிழா​வின்​போது சாலை விபத்​துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்​கப்​படு​கிறது. தாய் தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ‘சோங்க்​ரான்' என்ற சொல் இந்​தி​யா​வின் சங்​க​ராந்தி என்ற வார்த்​தை​யுடன் ஒத்​துப்​போகிறது. தெற்​காசி​யா​வின் பல இன மக்​களிடையே புத்​தாண்டு இந்த சமயத்​தில்​தான் கொண்​டாடப்​படு​கிறது.

சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை மற்​றும் விருந்​துகளு​டன் கொண்​டாடப்​படு​கின்​றன. சோங்க்​ரான் நீர் திரு​விழா​வின்போது, பழையன கழித்​து விட்​டு, புதி​யதை வரவேற்​கும் அடை​யாள​மாக மக்​கள் ஒருவர் மீது ஒரு​வர் தண்​ணீரைத் தெளித்​துக் கொள்கிறார்கள். தமிழ் புத்​தாண்டு கொண்​டாட்​டங்​களைப் போல​வே, தாய்​லாந்து மக்​கள் சோங்க்​ரான் திரு​விழா​வின்போது கோயில்​களுக்கு சென்று வழி​பாடு நடத்துகின்​றனர். இந்​நிலை​யில் இந்​தத் திரு​விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் இந்தத் தண்​ணீர் திரு​விழா கடந்த 4 நாட்​களாக நடைபெற்று வரு​கிறது. இந்த விழா​வில் பங்​கேற்க வரும்​போது 3 நாளில் சுமார் 951 சாலை விபத்​துகள் நடந்​துள்​ளன. இதில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 911 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News