Select Location
All Locations
State
Region
City / District
வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர்

வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர்

தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஏப்ரல் 19-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரிய தீபகற்பத்திலும் பிராந்தியத்திலும் அமைதிக்காக ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்வது குறித்தும் இருவரும் விவாதிப்பார்கள். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமி கண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் வியட்நாம் செல்ல உள்ளார்.


Malaimalar 1 hour ago
Home Flash News