Select Location
All Locations
State
Region
City / District
டெல்லி ஆளுநரை பாராட்டிய டிரம்ப்

டெல்லி ஆளுநரை பாராட்டிய டிரம்ப்

புதுடெல்லி: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய தரஞ்சித் சிங் சந்து (63), டெல்லியின் 21வது துணை நிலை கவர்னராக கடந்த மார்ச் 5ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக பொறுப்பேற்றுள்ள தரஞ்சித் சந்துவுக்கு எனது வாழ்த்துகள்! அனுபவம் வாய்ந்த ராஜதந்திரியாகவும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதராகவும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவர் எப்போதும் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார்.இந்திய அரசியல்

டெல்லியின் முன்னேற்றத்தை வழிநடத்துவதிலும், உலகளாவிய உறவுகளை மேம்படுத்துவதிலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 1988ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான சந்து, 2020 முதல் 2024ம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி விட்டு, 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Dinakaran 1 hour ago
Home Flash News