Select Location
All Locations
State
Region
City / District
நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை

நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை

புதுச்சேரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அளித்த ஊக்க உரை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் நான். இளங்கலை விவசாயம் பயின்ற போது, இறுதியாண்டில் யுபிஎஸ்சி படிக்க விருப்பம் ஏற்பட்டது. தொடக்கத்தில் எனது அறிவைப் பெருக்க ‘தி இந்து’ நாளிதழைப் படிக்கத் தொடங்கினேன். அதன்பின் ‘இந்து தமிழ் திசை‘யுடன் தொடர்பு ஏற்பட்டு, தொடர்ந்து வாசிக்கிறேன். நான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற ஐந்து ஆண்டுகள் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்தவன். குடும்பச் சூழலால் பயிற்சி மையத்தில் படிக்க முடியவில்லை. படித்து முடித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் கிடைத்த பணத்தை வைத்து யுபிஎஸ்சிக்கு தயாராக சென்னை சென்றேன்..

முதல் முறையே யுபிஎஸ்​சியை வெல்வது கடினம் என்ற கருத்​தும் தவறானது.‘உங்​களுக்​குள் ஒரு கனவு தூங்க விடா​மல் இருக்க வேண்​டும்’ என்ற கலாமின் கனவு​களை கடைப்பிடி​யுங்கள். முழு ஆர்​வத்துடன் இருந்​தால் வெற்றி நிச்​ச​யம். இவ்வாறு அவர் பேசினார். கிங் மேக்​கர்​ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் - நிர்​வாக இயக்​குநர் பூமிநாதன் பேசுகை​யில், “ தொடர் முயற்​சி, அயராத உழைப்​பு, திட்​ட​மிடல் காரணமாக சாதாரண குடும்​பப் பின்​னணி​யில் இருந்து வந்த பலர் இன்று ஆட்​சி​யர்களாக, காவல்​துறை உயர் அதி​காரிகளாக உள்​ளனர். இங்கு உங்​கள் பிள்​ளை​களை அழைத்து வந்​திருக்கும் பெற்​றோர், சரி​யான நேரத்​தில், சரி​யான பாதை​யில் அவர்​களை இதற்​காக தயார்​படுத்​துங்​கள்” என்றார். தொடர்ந்து கிங் மேக்​கர்​ஸ் கருத்தாளர் ஆதில் பைக் யுபிஎஸ்சி தேர்​வுக்கான கருத்​துரைகளை வழங்​கி​னார். இந்​நிகழ்வை ஒருங்​கிணைத்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவி பொது மேலா​ளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்​றும் விற்​பனை பிரிவு) முரு​கேசன் பேசும்​போது, “எனது இருமகள்​கள் யுபிஎஸ்சி தேர்வை வெல்ல முக்​கியக் காரணம் இந்​நிகழ்ச்சியே. 6 ஆண்​டு​களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்​சி​யில் அவர்​கள் முதலில் பங்கேற்றனர். அன்​றைய நிகழ்வு அவர்​களுக்கு சிறந்த ஒரு வழி​காட்​டி​யாக அமைந்​து, அவர்​களை வெற்றி பெற வைத்​தது. எளிமை​யான குடும்​பங்​களில் இருந்த பலரை​யும்​ உயர்​ பொறுப்​பு​களில்​ யுபிஎஸ்​சி அமர்த்​தி​யுள்​ளது” என்​று தெரி​வித்​தார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News