Select Location
All Locations
State
Region
City / District
நான் எனது நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன்.. இந்தியா, ஆஸ்திரேலியா குடியுரிமையை நிராகரித்த ரஷீத் கான்

நான் எனது நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன்.. இந்தியா, ஆஸ்திரேலியா குடியுரிமையை நிராகரித்த ரஷீத் கான்

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் லெக் ஸ்பின்னருமான ரஷீத் கான் தனக்கு இந்தியா, ஆஸ்திரேலியா குடியுரிமையை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். 'ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை' என்ற அவரின் சுயசரிதையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தின்படி, 2023 ஐபிஎல் சீசனின் போது, இந்திய கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ரஷித் கானைச் சந்தித்து "உங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) நிலைமை சரியில்லை. நீ பேசாமல் இந்தியாவிலேயே தங்கிவிடு, உனக்கு இந்தியக் குடியுரிமை மற்றும் ஆவணங்களை நாங்கள் பெற்றுத் தருகிறோம். இந்தியாவிற்காக விளையாடு" என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு ரஷித் கான் புன்னகையுடன், "மிக்க நன்றி, ஆனால் நான் எனது நாடான ஆப்கானிஸ்தானுக்காக மட்டுமே விளையாடுவேன்" என்று பதிலளித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவும் அவருக்கு இதேபோன்ற அழைப்பை விடுத்துள்ளது. "நான் எனது தாய்நாட்டிற்காக விளையாடாவிட்டால், வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட மாட்டேன்" என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

2018ல் கொல்கத்தாவுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்கள் அவருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.


Malaimalar 13 days ago
Home Flash News