Select Location
All Locations
State
Region
City / District
அரசியலில் திடீர் திருப்பம் : எஸ்.பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு..!

அரசியலில் திடீர் திருப்பம் : எஸ்.பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு..!

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க. மொத்தத்தில் 169 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.க. கட்சி வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டிய நிலையில், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலர் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.


Smacy News 46 minutes ago
Home Flash News