Select Location
All Locations
State
Region
City / District
6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர் பதவி தருவதாக அரசு பேரம்: பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர் பதவி தருவதாக அரசு பேரம்: பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் தவெக வெற்றி பெற்​றது. இதில் எஸ்பி வேலுமணி, சி.​வி.சண்​முகம் தரப்பு அதி​முகவை சேர்ந்த 25 எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். பழனி​சாமி தரப்​பில் 22 எம்​எல்​ஏக்​கள் அரசுக்கு எதி​ராக வாக்​களித்தனர். இந்​நிலை​யில், சட்​டப்​பேரவை வளாகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி கூறிய​தாவது: புதி​தாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள அரசு நம்​பிக்கை கோரும் தீர்​மானத்தை முன்​மொழிந்​தது.

அதில் அதி​முக உறுப்​பினர்​கள் எதிர்த்து வாக்​களிக்க வேண்​டும் என்று அவை​யில் நான் பேசினேன். ஆனால், கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக எம்​எல்​ஏக்​கள் மீது நடவடிக்கை எடுக்க பேர​வைத் தலை​வரிடம் புகார் அளிக்​க​வுள்​ளோம். அதி​முக​வுக்கு சில எம்​எல்​ஏக்​கள் துரோகம் செய்​துள்​ளனர். கொறடா உத்​தரவை மீறி சட்​டத்​துக்​குப் புறம்​பாக தவெக அரசுக்கு வாக்​களித்​துள்​ளனர். 6 அமைச்​சர்​கள் மற்​றும் 10 வாரி​யத் தலை​வர்​கள் பதவி கொடுப்​ப​தாக தவெக பேரம் பேசி​யுள்​ளது.

அதனால்​தான் அவர்​கள் ஆதர​வாக வாக்​களித்​துள்​ளனர். அதி​முக​வுக்கு விசு​வாசம் இல்​லாமல் துரோகம் விளைவிக்​கிறார்​கள் சில முன்​னாள் அமைச்​சர்​கள். தூய்​மை​யான ஆட்சி நடத்​து​வேன் என்று சொல்​லும் முதல்​வர் விஜய், ஒரு கட்​சி​யில் கருத்து வேறு​பாடு நில​வும்​போது ஒரு தரப்​பினரைச் சந்​திப்​பது எந்த விதத்​தில் நியா​யம்? இது​தான் தூய்​மை​யா? எல்லா இயக்​கங்​களுக்​கும் சோதனை வரும், பிரிவு வரும்.

ஆனால் எந்த தலை​வரும் பிரிந்​தவர்​களின் இல்​லங்​களுக்​குச் சென்​றது இல்​லை. ஆரம்​பத்​திலேயே தவறான பாதைக்​குச் செல்​கிறார் தவெக விஜய். இது தவறான முன்​னு​தா​ரணம். 108 இடங்​களில் மட்​டும்​தான் தவெக வென்​றது. விஜய் ஒரு தொகு​தியை ராஜி​னாமா செய்​த​தால் எண்​ணிக்கை 107 ஆனது. ஓர் எம்​எல்ஏ வாக்​களிக்க முடி​யாத​தால் எண்​ணிக்கை 106 ஆனது.

தேர்​தல் பிர​சா​ரத்​தில் நான் திமுக​வைத்​தான் தாக்​கிப் பேசினேன். அதி​முக உரு​வானதே திமுகவை எதிர்த்​துத்​தான். தவெக அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டுமென்ற ஆசை​யில் நிர்​வாகி​களிடம் தவறான தகவலைச் சொல்​கின்​றனர். நூற்​றுக்கு நூறு சதவீதம் திமுக​வுடன் எந்​தப் பேச்​சு​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை. கட்​சி​யின் அதி​காரம் என்​னிடம்தான் உள்​ளது. கொற​டாவை நியமிக்​கும் அதி​காரம் பொதுச்​செய​லா​ள​ருக்​குத்​தான் உள்​ளது. சட்​டப் பேர​வை​யில்​ வி​தி, மரபு பின்​பற்​றப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News