Select Location
All Locations
State
Region
City / District
கரூர் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்பட 19 போலீஸார் திடீர் பணியிட மாற்றம்

கரூர் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்பட 19 போலீஸார் திடீர் பணியிட மாற்றம்

கரூர்: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த துயர சம்​பவத்தை விசா​ரித்த டிஎஸ்​பிக்​கள், காவல் ஆய்​வாளர்​கள் உட்பட 19 போலீ​ஸார் வெவ்​வேறுமண்​டலங்​களுக்கு நேற்று முன்​தினம் பணி​யிட​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். கரூரில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பொதுக்​கூட்​டத்​தில் அதன் தலை​வர் விஜய் பங்​கேற்​றோர். இ​தில் நேரிட்ட நெரிசல் காரண​மாக 41 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக இந்த வழக்கை விசா​ரித்த கரூர் டிஎஸ்பி வி.செல்​வ​ராஜ், தூத்​துக்​குடி மாவட்ட சமூக நீதி மற்​றும் மனித உரிமை​கள் டிஎஸ்​பி​யாக இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். அதே​போல, கரூர் ஊரகம், குளித்தலை டிஎஸ்​பிக்​கள் பி.அப்​துல்கபூர், கே.கே.செந்​தில்​குமார் ஆகிய 2 பேரும் சமூக நீதி மற்​றும் மனித உரிமை​கள் டிஎஸ்​பிக்​களாக முறையே தரு​மபுரி, கடலூர் மாவட்​டங்​களுக்கு மாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல, கரூர் நகர காவல் ஆய்​வாள​ராக இருந்​து, தற்​போது தனிப் பிரி​வில் உள்ள ஜி.மணிவண்​ணன், பசுப​தி​பாளை​யம் ஆய்​வாள​ராக இருந்து தற்​போது நங்​கவரத்​தில் உள்ள சதீஷ்கு​மார் மற்​றும் ஆய்​வாளர்​கள் திலக்​(தென்​னிலை), ராஜேந்​திர பிர​சாத் (சின்​ன​தா​ராபுரம்) ஆகியோர் வடக்கு மண்​டலத்​துக்கு பணி​யிட மாறு​தல் செய்​யப்​பட்​டனர். ஆய்​வாளர்​கள் முத்​துக்​கு​மார் (வெங்​கமேடு), சீனி​பாபு (பசுப​தி​பாளை​யம்), அருள் பிர​காஷ் (கரூர் நகரம்), நெப்​போலியன் (க.பரமத்​தி), கோபி (வேலா​யுதம்​பாளை​யம்), தனிப் பிரி​வில் உள்ள உதவி ஆய்​வாளர் நாக​ராஜ் ஆகியோர் தென் மண்​டலத்​துக்​கும், தோகைமலை காவல் ஆய்​வாளர் ஜெய​ராமன் ஆவடி மாநகர காவல் துறைக்​கும் மாறு​தல் செய்​யப்​பட்​டனர். கரூர் துயர சம்​பவத்​தின்​போது சிறப்பு உதவி ஆய்​வாள​ராக இருந்த ராஜாமணி (தற்​போது ஐஜி தனிப் பிரிவு, கரூர் நகரம்), தனிப்​பிரிவு தலைமை காவலர்​கள் எஸ்​.​ராமலிங்​கம் (சின்​ன​தா​ராபுரம்), மோகன்​ராஜ் (க.பரமத்​தி) ஆகியோர் தென்​மண்​டலத்​துக்​கும், தலை​மைக் காவலர்​கள் கதிர்​வேல் (வேலா​யுதம்​பாளை​யம்) சக்​கரை​பாவா (அர​வக்​குறிச்​சி) ஆகியோர் வடக்கு மண்​டலத்​துக்​கும் மாறுதல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News