குறையாத வசூல்: ‘கருப்பு’ படக்குழுவினர் உற்சாகம்
கருப்பு’ படத்தின் வசூல் குறையாமல் இருப்பதால், படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மே 15-ம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ வெளியானது. இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால், முதல் நாள் வசூல் ரூ.13 கோடி வரை இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து வசூல் அதிகரிப்பால் படக்குழுவினர் உற்சாகமடைந்தார்கள். தற்போது 5 நாட்களை கடந்து தமிழகத்தில் ரூ.10 கோடிக்கும் அதிகமாகவே வசூல் செய்துள்ளது
இந்த வசூலினால் படக்குழுவினர் மிகவும் சந்தோஷமாகி இருக்கிறார்கள். சூர்யாவின் திரையுலக வாழ்வில் அதிக வசூல் செய்யும் படமாக ‘கருப்பு’ அமையும் என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் பங்குத் தொகையாக மட்டுமே ரூ.60 கோடியை நெருங்கும் என்று விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது ‘கருப்பு’. இதனால் உலகளவில் மொத்த வசூலில் ரூ.300 கோடியை கடக்கும் என்று படக்குழு கருதுகிறது. இதன் மூலம் ‘கருப்பு’ படத்திலிருந்து படக்குழுவினருக்கும் ரூ.125 கோடி வரை பங்குத் தொகை என எதிர்பார்க்கப்படுகிறது.