Select Location
All Locations
State
Region
City / District
நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி

நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி

சென்னை: தமிழகத்​தில் நீட் தேர்​வுக்​காக அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இலவச பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதையடுத்து மறு தேர்​வுக்​கான குறுகிய கால பயிற்​சியை பள்​ளிக்​கல்​வித் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. அதன்​படி நீட் தேர்​வில் பங்​கேற்​க​வுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களை தயார்ப்​படுத்​தும் நோக்​கில் மாவட்ட அளவி​லான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடை​பெற இருக்​கிறது.

இந்த முகாமில் மாணவர்​கள் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகும் வகை​யில் பாட​வாரி​யாகப் பயிற்​சிகள், மாதிரித் தேர்​வு​கள் மற்​றும் கல்​வி​யியல் நிபுணர்​களின் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்பட உள்​ளன. இதில் மாணவ-​மாணவி​கள் பங்​கேற்​பதை தலைமை ஆசிரியர்​கள் வாயி​லாக உறு​தி ​செய்ய வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் வெளி​யிடப்பட்ட சுற்​றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Hindu Tamil 43 minutes ago
Home Flash News