Select Location
All Locations
State
Region
City / District
8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா? மக்கள் நல்வாழ்வுத் துறை மறுப்பு!

8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா? மக்கள் நல்வாழ்வுத் துறை மறுப்பு!

தமிழகத்தில் புதிதாக 8,000 தனியாா் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விளக்க அறிக்கை:

அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் குறித்து ஆய்வு செய்தாா். மருத்துவமனைகள், கினீனிக்குகளின் பதிவு உரிமத்தை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்வதற்கும் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. விண்ணப்பங்களை நோ்மையாக ஆய்வு செய்து, தகுதியான கிளீனிக் அல்லது மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிக பதிவு உரிமச் சான்றிதழ் வழங்குமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா். அதேவேளையில், புதிதாக 8,000 கிளீனிக்குகள், மருத்துவமனைகளை தொடங்க அனுமதி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dinamani 55 minutes ago
Home Flash News