அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா
அரசியலில் அதிரடி திருப்பமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா
செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவார்.மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். மூவரும் தவெகவில் இணைந்து அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.