மக்களே உஷார்! தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் நாளை(29-05-2026) பவர் கட்.. முழு விவரம்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (மே 29 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.