இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!
உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பைப்லைன் மூலம் கேஸ் (PNG) இணைப்பு பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கடுமையான முடிவு
உலக அரசியல் சூழல் மற்றும் முக்கிய கடல்வழிப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) மூடப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வீடுகளில் பைப்லைன் மூலம் கேஸ் இணைப்பு (PNG) பெற்றவர்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.