Select Location
All Locations
State
Region
City / District
“ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த ஆட்சி மீது பயமில்லை”- டிடிவி தினகரன்

“ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த ஆட்சி மீது பயமில்லை”- டிடிவி தினகரன்

தவெக ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் ஆகிறது, இந்த 15 நாள் ஆட்சி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தவெக ஆட்சியில் ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் பயம் இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி வி தினகரன் கூறினார்.
இராமநாதபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் கணேசன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்தார் அந்த பேட்டியின்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லியில் பிரதமர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலே திரும்பி இருக்கிறாரே என்று கேட்டதற்கு இதுவரை முதலமைச்சர் ஆகி தமிழகத்தில் கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லையே என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குபேட்டி அளித்த டிடிவி தினகரன், திமுகவை தீய சக்தி என்று சொல்லி வாக்கு சேகரித்த விஜய், திமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சிகளை தன்னுடைய ஆட்சியில் அங்கம் வகிக்க வைத்தது ஜனநாயக விரோதம். தவெக ஒரு தூய சக்தி என்பது பொய். பித்தலாட்ட சக்தி என்பது தான் உண்மை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை விஜய் ஆதரித்தது தவறு. அவரை ஆதரித்த அதிமுகவினரை அவர் நடு ரோட்டில் விட்டு விட்டார். பிரிந்திருந்தவர்களை விஜய் ஆதரித்தது சட்ட விரோதம். விஜய் அவர்களை ஏமாற்றி விட்டார் . நல்ல வேலையாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிட்டனர் . குறுக்கு வழியில் திராவிட கட்சிகளை அழிக்க விஜய் திட்டமிடுகிறார். பொதுமக்கள் இந்த தேர்தலில் தவறான முடிவு எடுத்து விட்டோம் என்று தற்போது உணர்ந்து விட்டனர் . தற்போது மின்சார துறையை முறையாக கையாளத் தெரியவில்லை இன்னும் மூன்று மாதம் ஆறு மாதத்தில் இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. தவறான முடிவு எடுத்து விட்டோம் என்று மக்கள் உணரும் நிலை உருவாகும். அவர்களை நம்பிச் சென்ற எங்கள் எம்எல்ஏ தற்போது நடுத்தெருவில் நிற்கிறார். தற்போது விவசாயிகள் நாடு முழுவதும் தவெகவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்வது ஏமாற்று வேலை என்றார்.


Smacy News 1 hour ago
Home Flash News