French Open டென்னிஸ்: 2வது சுற்றில் பவுலினிக்கு அதிர்ச்சி அளித்த அர்ஜென்டினா வீராங்கனை
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது..
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது..
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 13 வீராங்கனையும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அர்ஜென்டினாவின் சோலானா சியாரா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா வீராங்கனை அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்..
இதன்மூலம் டாப் 13 வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றிலேயே பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..