Select Location
All Locations
State
Region
City / District
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் ஹிட் கொண்டு விரட்டியடிப்பார்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் ஹிட் கொண்டு விரட்டியடிப்பார்- தமிழிசை

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக 4 எம்எல்ஏக்கள் தற்பொழுது தவெகவில் இணைந்துள்ளது மக்கள் தீர்ப்பிற்கு எதிரானது. இதனைத் தவெக ஊக்கப்படுத்துவது மிக மிக தவறு என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக்கொண்டு தரிசனம் செய்ய மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் சூழ்நிலையில் இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் என்றும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு மின்வெட்டு ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில் மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புள்ளாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர் மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் எனவும் கூறினார்


Smacy News 1 hour ago
Home Flash News