"பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு நான் காரணமல்ல" - சதீசன்
கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு தான் காரணம் என்று பரப்பப்படும் செய்தியை நம்ப வேண்டாம் என்று முதலமைச்சர் சதீசன் கேட்டுக்கொண்டார்.
கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு தான் காரணம் என்று பரப்பப்படும் செய்தியை நம்ப வேண்டாம் என்று முதலமைச்சர் சதீசன் கேட்டுக்கொண்டார்.
திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில்பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்தபோது பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த வேண்டும் என்று தான் கேட்டதாக வெளியாகும் செய்தி நகைச்சுவை என்று விமர்சித்தார். புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான ஒன்று என்றார்.