அரை இறுதியில் வினேஷ் போகத் தோல்வி
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் மல்யுத்த விளையாட்டுக்கான தகுதி சுற்று தேர்வை இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கில் நடத்தியது. இதில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்திய நட்சத்திர வீராங்கனையான வினேஷ் போகத் 53 கிலோ பிரிவில் பங்கேற்றார்.
முதல் சுற்றில் ஜோதியை 7-1 என என்ற கணக்கல் எளிதாக வீழ்த்தினார் வினேஷ் போகத். தொடர்ந்து காலிறுதியில் நிஷு உடன் மோதினார். இதில் நிஷு அளித்த கடும் சவால்களை சமாளித்து வினேஷ் போகத் 7-6 என வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில் மீனாட்சி கோயத்துடன் மோதினார் வினேஷ் போகத். இதில் வினேஷ் போகத் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை வினேஷ் போகத் தவறவிட்டார்.