Select Location
All Locations
State
Region
City / District
4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் ஒரு கோடி பேர் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்சாட்டி உள்​ளார்.

மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​த​தால் இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ம் தேதி மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவ, மாண​வியரின் விடைத்​தாள் டிஜிட்​டல் முறை​யில் திருத்​தப்​பட்​ட​தில் சர்ச்சை எழுந்​திருக்​கிறது. உத்தர பிரதேசம், பிஹாரில் அண்​மை​யில் நடை​பெற்ற கணினி வழியி​லான எஸ்​எஸ்சி தேர்​வின்​போது சர்​வர் கோளாறால் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இந்த சூழலில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று நடை​பெற்ற கணினி வழியி​லான கியூட் நுழைவுத் தேர்​வின்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதனால் சுமார் 2 மணி நேரம் கால​தாமதம் ஏற்​பட்​டது.

அண்மை
ப்ரீமியம்
தமிழகம்
தேர்தல் 2026
இந்தியா
உலகம்
சினிமா
விளையாட்டு
வணிகம்
வீடியோ
ஜோதிடம்
க்ரைம்
கல்வி
மேலும்

இந்தியா
4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு
Updated on: 
31 May 2026, 8:38 am
1 min read
Follow Us
புதுடெல்லி: நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் ஒரு கோடி பேர் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்சாட்டி உள்​ளார்.

மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​த​தால் இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ம் தேதி மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவ, மாண​வியரின் விடைத்​தாள் டிஜிட்​டல் முறை​யில் திருத்​தப்​பட்​ட​தில் சர்ச்சை எழுந்​திருக்​கிறது. உத்தர பிரதேசம், பிஹாரில் அண்​மை​யில் நடை​பெற்ற கணினி வழியி​லான எஸ்​எஸ்சி தேர்​வின்​போது சர்​வர் கோளாறால் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இந்த சூழலில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று நடை​பெற்ற கணினி வழியி​லான கியூட் நுழைவுத் தேர்​வின்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதனால் சுமார் 2 மணி நேரம் கால​தாமதம் ஏற்​பட்​டது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் சுமார் ஒரு கோடி மாணவ, மாண​வியர் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். ஒரு தேர்​வு​கூட நேர்​மை​யாக நடத்​தப்​பட​வில்​லை.

பிரதமர் நரேந்​திர மோடியை, ‘உலக குரு' என்று அழைக்​கிறார்​கள். ஆனால் அவர் ஒட்​டுமொத்த கல்வி முறையை​யும் சீர்​குலைத்து உள்​ளார். நீங்​கள் (மோடி) ஒரு தலை​முறை​யின் எதிர்​காலத்தை அழித்துக் கொண்​டிருக்​கிறீர்​கள். அந்த தலை​முறை நீங்​கள் செய்​யும் தவறுக்கு பொறுப்​பேற்க வைக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Hindu Tamil 54 minutes ago
Home Flash News