Select Location
All Locations
State
Region
City / District
அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அதிமுக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணி - சி.வி.சண்முகம் அணியாக பிரிந்தது. இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.,க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். இதனிடையே சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாயினர். recommended by

இந்த நிலையில் அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தற்கொலை செய்துக் கொண்ட தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், அதிமுகவில் சில நாட்களாக நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரியான எளிய தொண்டர்கள் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும். என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும். என்னுடன் அரசியலில் பயணித்த தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய கழக செயலாளர், திருப்பனந்தாள் பேரூர் கழக செயலாளருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கடைசி ஆசையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மீண்டும் ஒரு ஜென்மம்ம் இருந்தால் நான் அதிமுக தொண்டனாக பிறக்கவே ஆசைப்படுகிறேன். விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார். உயிரை மாய்த்துக்கொண்ட, திருப்பனந்தாளைச் சேர்ந்த தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். மகேந்திரனின் குழந்தையின் முழு கல்விச் செலவையும் அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News