Select Location
All Locations
State
Region
City / District
பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!

பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இந்நிலையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.


Smacy News 1 hour ago
Home Flash News