Select Location
All Locations
State
Region
City / District
வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம்: கே.எஸ். அழகிரி கோரிக்கை

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம்: கே.எஸ். அழகிரி கோரிக்கை

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என கே.எஸ். அழகிரி கோரிக்கை வைத்துள்ளது பற்றி. வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என கே.எஸ். அழகிரி இன்று (ஆகஸ்ட் 1) கோரிக்கை வைத்துள்ளார். சிதம்பரம், வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.

வடலூர் நகரில் ஸ்ரீராமலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிற இடத்தில் நடைபெற்று வந்த 'வள்ளலார் பன்னாட்டு' 'மையத்தின் பணிகளை தமிழக அரசு நிறுத்திக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஒரு நல்ல பணி எதன் காரணமாக நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. வள்ளலாருடைய ஆலயம் உலகம் முழுவதும் இருக்கிற அவர்களுடைய பக்தர்கள் அரசால் மேம்பாடு அடைந்து வருவதாக எண்ணுகிற நேரத்தில் அந்தப் பணி நிறுத்தப்பட்டு இருப்பது அருட்பெருஞ்ஜோதி பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. பன்னாண்டு காலமாக அந்த திருக்கோவிலுடைய தோற்றம் யாருடைய மனதையும் கவராத வகையிலும், மகிழ்விக்காத நிலையிலும் வெறிச்சோடி காணப்பட்டது. 

பார்ப்பதற்கு வறட்சியாகவும், யாரும் கவனிக்காத கைவிடப்பட்ட ஒரு வறண்ட நிலப்பரப்பாகவே அது காட்சியளித்தது. அதை சுற்றிலும் பசுமையான மரங்களோ, பாதுகாப்பான சுற்றுச்சூழலோ, ஏதும் இல்லாமல் ஆடு, மாடு மேய்க்கிற இடமாகவும், சிறுவர்கள் விளையாடுகிற இடமாகவும், இரவு நேரங்களில் மக்கள் ஒதுங்குகிற இடமாகவும் மட்டுமே காணப்பட்டது.இந்த நிலை மாறாதோ! இந்த இடமும் இல்லை நடராஜர் ஆலயத்தை போன்று அயோத்தி இராமர் கோவிலைப் போன்று, திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தை போன்று, சிறப்புறாதா! என்று ஏங்கியவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு. இங்கு வந்து செல்கிற பக்தர்களுக்கு ஒதுங்குவதற்கு கூட ஒரு கழிப்பறை நல்ல முறையில் இல்லை. காலணி இல்லாமல் நடந்து செல்பவர்களுக்கு பாதையில் பரவி கிடக்கிற நெருஞ்சி முட்களும். கரடு முரடான கற்கள் சிதறி கிடப்பதும் தான் மிகுந்த துயரத்தை தரும்.


Dinamani 1 day ago
Home Flash News