Select Location
All Locations
State
Region
City / District
ஆவின் 'கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?

ஆவின் 'கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?

கோடை காலத்தில் பால் கொள்முதல் குறைவு மற்றும் 'கிரீன் மேஜிக்' பால் விற்பனையில் ஏற்படும் கடும் நிதி இழப்பு ஆகியவை இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. அதாவது சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைத்துள்ளது. வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் தினசரி 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட கிரீன் மேஜிக் பால் மட்டும் சுமார் 7.5 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த விநியோகம் 2.5 லட்சம் லிட்டராக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆவின், கிரீன் மேஜிக் பாலை லிட்டருக்கு 44 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஆனால் உற்பத்திச் செலவு சாதாரண காலங்களில் 48 - 49 ரூபாயாகவும், கோடை காலத்தில் 49 - 51 ரூபாயாகவும் உயர்கிறது. இதனால் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 4 முதல் 5 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் இதே தரத்திலான பாலை 64 முதல் 68 ரூபாய் வரை விற்கின்றன. மேலும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் கொள்முதல் செய்யும் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதிமுறைகளின்படி, கொழுப்புச் சத்தை சமன் செய்ய வெளிச்சந்தையில் இருந்து வெண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக மட்டும் மாதம் 65 முதல் 75 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Smacy News 1 hour ago
Home Flash News