Select Location
All Locations
State
Region
City / District
தாய்லாந்து இளவரசி காலமானார்...!! 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர்..

தாய்லாந்து இளவரசி காலமானார்...!! 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர்..

இளவரசி பஜ்ரகிட்டியாபா, மன்னர் மகா வஜிரலோங்கோர்னுக்கும் அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலிக்கும் பிறந்த முதல் குழந்தை. மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்- அரசியார் சிரிகிட் ஆகியோரின் முதல் பேரக்குழந்தை என்ற சிறப்பும் அவரைச் சாரும். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு அரண்மனையில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை தேறவில்லை.

கடந்த மே 21ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அரண்மனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.பெருங்குடல் அழற்சியால் அவரது வயிற்றில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. இது, குறைந்த ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு, வழக்கத்துக்கு மாறான வகையில் ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு வழிவகுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டுக்கு இயந்திரங்கள் மூலம் ஆதரவு கொடுக்கப்பட்டன. நோய் எதிர்ப்பு மருந்துகள், ரத்த அழுத்தத்தைத் தூண்டி இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருந்தாலும் அவரது நிலை மேலும் மோசமடைந்ததாக அறிக்கை கூறியது. இதற்கிடையே வயிற்றுத் தொற்றால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து பாங்காக் சுலாலோங்கோர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளவரசி காலமானதை அரசு உறுதி செய்தது. இளவரசி பஜ்ரகித்தியபா உடலிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Smacy News 1 hour ago
Home Flash News