Select Location
All Locations
State
Region
City / District
விஜய் கட்சியினர் ஷாக்..! தவெக-வில் சேர்ந்த 10 நாட்களில் அரசியலை விட்டே விலகல்..!

விஜய் கட்சியினர் ஷாக்..! தவெக-வில் சேர்ந்த 10 நாட்களில் அரசியலை விட்டே விலகல்..!

பாப்பிரெட்டிப்பட்டி Ex. MLA கோவிந்தசாமி சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில். தற்போது திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்புதவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அக்கட்சியிலிருந்து விலகுவதாக பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, கடந்த வாரம் சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்தார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. முன்பு, கோவிந்தசாமி திமுகவுக்கு தாவப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில் வீராவேசமாகப் பேசி இருந்தார் கோவிந்தசாமி. "நான் அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு தாவுவதாக உலா வரும் தகவலில் உண்மை இல்லை. நான் அதிமுகவின் உண்மை விசுவாசி, என் உடம்பில் எனது தந்தையின் ரத்தம் மட்டுமே ஓடுகிறது. எனக்கு ஒரே அப்பா அதிமுக தான்" எனப் பேசியிருந்தார். 

கோவிந்தசாமி தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு இயக்கத்துக்கு சென்றேன். தற்போது உள்ள சூழ்நிலையில் எனது மனமும், உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் இன்று முதல் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். நான் எந்த இயக்கத்திலும் இல்லை. எனவே இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக் கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொது சேவையில் மக்களோடு தொடர்ந்து இருப்பேன்" என்று கூறப்பட்டுள்ளது. தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, 10 நாட்களில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Smacy News 1 hour ago
Home Flash News