Select Location
All Locations
State
Region
City / District
ராமர் கோயிலில் 2 கிலோ தங்க கதாயுதம், பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மாயம்

ராமர் கோயிலில் 2 கிலோ தங்க கதாயுதம், பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மாயம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருட்டு தொடர்​பாக 3 பேர் கொண்ட சிறப்​புக் குழுவினர் கடந்த திங்​கள்​கிழமை விசா​ரணை​யைத் தொடங்கினர்.

அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்​கைகள், நன்​கொடைகளில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக விசா​ரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை (எஸ்​ஐடி) முதல்​வர் ஆதித்​ய​ நாத் நியமித்துள்​ளார். அந்​தக் குழு​வினர் கடந்த திங்​கள்கிழமை விசாரணையை தொடங்​கினர். குறிப்​பாக, முறை​கேடு செய்தவர்கள், ஆதா​ரங்​களை அழித்​தவர்​கள் பற்​றிய விவரங்களை எஸ்​ஐடி அதிகாரி​கள் சேகரித்து வரு​கின்​றனர்

ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை அதிகாரிகளுக்கு நெருக்​க​மானவர்​கள், அயோத்​தி​யில் திடீரென சொத்து சேர்த்தவர்கள் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் வந்துள்ளனர். அவர்களில் முக்​கிய​மானவ​ராக அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் முன்​னாள் ஓட்​டுநர் ராம் சங்கர் யாதவ் மீது சந்​தேகம் எழுந்​துள்​ளது. கோயில் நிர்​வாகம் தொடர்​பான விஷ​யங்​களில் ராம் சங்​கருக்கு சிறப்பு சலுகைகள் பல கிடைத்​துள்​ளன.

அவற்றை பயன்​படுத்தி வெளியூரில் இருந்து வரும் கோடீஸ்வர பக்​தர்​களு​டன் அவர் நேரடி தொடர்​பில் இருந்​துள்​ளார். தனது நெருங்​கிய கூட்​டாளி​களுக்கு வேலை பெற்று தந்​ததோடு, அவர்களைப் பணம் எண்​ணும் குழு​விலும் இடம்​பெறச் செய்துள்ளார். அதன்​பின், ராம் சங்​கரின் நிதி நிலைமை கோடிக்கணக்​கான ரூபா​யாக உயர்ந்​துள்​ளது என்று புகார்​கள் எழுந்​துள்​ளன. இதுகுறித்து எஸ்​ஐடி அதி​காரி​கள் தீவிர விசாரணை நடத்தி வரு​கின்​றனர்

இந்​நிலை​யில், ரூ.200 கோடி காணிக்கை பணம் மட்​டுமல்​லாமல், ராமர் கோயிலுக்கு காணிக்கை அளிக்​கப்​பட்ட 2 கிலோ எடையுள்ள தங்க கதா​யுதம், பல கோடி ரூபாய் மதிப்​பிலான தங்க நகைகள் காணா​மல் போய் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. ராமர் கோயில் அறக்​கட்​டளை​யின் அலு​வல​கப் பொறுப்​பாளர்​களில் ஒருவர் மற்​றும் வங்​கி​யால் பணி​யமர்த்​தப்​பட்ட முகமை​யின் சில ஊழியர்​களே இந்​தத் திருட்​டைச் செய்​த​தாகக்​ குற்​றச்​சாட்​டு​கள்​ எழுந்​துள்​ளன.


Hindu Tamil 1 hour ago
Home Flash News