Select Location
All Locations
State
Region
City / District
சங்கீத நாடக அகாடமி விருதுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் தேர்வு

சங்கீத நாடக அகாடமி விருதுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் தேர்வு

புதுடெல்லி: இசை, நடனம் மற்​றும் நாடகத்​துக்​கான தேசிய அகாட​மி​யாக விளங்​கு​வது, சங்கீத நாடக அகாடமி. இது இந்தியாவின் கலைகளுக்​கான மிக உயர்ந்த தேசிய அமைப்பாகும். கடந்த 1953-ல் நிறு​வப்​பட்டு மத்​திய அரசின் கலாச்சார அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படு​கிறது.

இதன் பொதுக்​குழுக் கூட்​டம் கடந்த மார்ச் 22 முதல் 26-ம் தேதி வரை டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில், 2024-25-ம் ஆண்​டுக்​கான சங்​கீத நாடக அகாடமி விருதுக்​குரிய​வர்​கள் தேர்வு செய்யப்பட்டுள்​ளனர். இது தொடர்​பான அறி​விப்பு சமீபத்​தில் வெளி​யாகியது

அகாடமி ரத்னா விருதுக்கு 7 பேர் தேர்​வாகி உள்​ளனர். இதில் தமிழ​ரான பரத​நாட்​டியக் கலைஞர் சுதர்னி ரகுப​தி​யும் ஒரு​வர் ஆவார். இசைக் கலைஞர்​களுக்​கான 12 விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்​.​விஜய் சிவா, ஏ.எஸ்​.கிருஷ்ணன் ஆகியோர் தேர்​வாகினர்.

நடனக்​கலைக்​கான 12 விரு​தாளர்​களில் பரத​நாட்​டி​யத்​திற்​காக தமிழர்​களான ரோஜா கண்​ணன், கலாஷேத்​ரா​வின் கே.ஹரிபிரசாத் ஆகியோ​ரும் குச்​சுப்​புடிக்​காக நாகஜோதி மற்​றும் சீதா நாகஜோ​தி​யும் இடம்​பெற்​றுள்​ளனர். டெல்​லியைச் சேர்ந்த இந்த தம்​ப​தி​களில் நாகஜோ​தி, டெல்லி தமிழ் சங்​கம், டெல்லி கல்விக் கழகத்​தின் முன்​னாள் துணைத் தலை​வர் ஆவார்.

நாடக நடிகர்​களுக்​கான விருது பெறும் 10 பேரில் தமிழ் நடிகர் வாகை சந்​திரசேகரும் உள்​ளார். நாட்​டுப்​புறக் கலைகளுக்​கான 13 விரு​தாளர்​களில் ஒரு​வ​ராக புதுச்​சேரி​யின் கே.​முரு​கன் உள்​ளார். மேலும், அனைத்து துறை​களின் விருதுக்கு 5 கலைஞர்​கள் தேர்வாகி உள்​ளனர்.

பெல்​லோஷிப்​களுக்​காக 40 பேர் தேர்​வாகி உள்​ளனர். இவர்​கள் ரூ.3 லட்​சம் ரொக்​கம் அளித்து கவுரவிக்​கப்பட உள்​ளனர். சங்​கீத் நாடக அகாடமி உஸ்​தாத் பிஸ்​மில்​லாஹ் கான் யுவ புரஸ்​கார் விருதுக்கு 106 இளம் கலைஞர்​களும் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு உள்ளனர். இந்த விருதுகள் குடியரசுத்​ தலை​வ​ரால்​ வழங்​கப்​பட உள்ளன.


Hindu Tamil 1 hour ago
Home Flash News