Select Location
All Locations
State
Region
City / District
தமிழக முதல்வராக விஜய் வந்தபிறகு பள்ளிக்கு உடனடியாக ஒப்புதல்: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு

தமிழக முதல்வராக விஜய் வந்தபிறகு பள்ளிக்கு உடனடியாக ஒப்புதல்: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு

சென்னை: கடந்த ஆட்​சி​யில் இலவசப் பள்​ளிக்கு ஒப்​புதல் பெற பணம் கேட்​கப்​பட்​டது. தற்​போது தவெக ஆட்​சி​யில் ஒப்​புதல் உடனடி​யாக கிடைத்​து​விட்​டது என்று தவெக அரசை ஸ்ரீதர் வேம்பு பாராட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வு: கிராமப்​புற குழந்​தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்​ப​தற்​காக நாங்​கள் கலை​வாணி கல்வி மையம் என்ற பள்​ளியை தொடங்​கினோம்.

அப்​பள்​ளிக்கு கடந்த ஆட்​சி​யில் ஒப்​புதல் பெறு​வதற்கு கால தாமதத்தை சந்​திக்க வேண்டி இருந்​தது. மேலும், குறிப்​பட்ட அளவு பணமும் கேட்​கப்​பட்​டது. இலவச பள்​ளி​யாக இருந்​தா​லும் இது ஒன்று மட்​டுமே வழி என கூறப்​பட்​டது.

தற்​போது முதல்​வ​ராக விஜய் வந்த பிறகு, ஒப்​புதல் உடனடி​யாக கிடைத்​து​விட்​டது. நமது மாநிலத்​தில் இது​போன்ற நேர்​மறை​யான முன்​னேற்​றம் வந்​திருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. இத்​தகைய புத்​துணர்ச்​சி​யூட்​டும் மாற்​றத்தை தந்த முதல்​வர் விஜய்க்கு நன்​றி. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News