Select Location
All Locations
State
Region
City / District
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை தவிர, 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரி டெண்டர் வெளியிட்டது.

இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தனியார்மயமாக்குவதை கைவிடக் கோரி முதல்வர் விஜய்யை வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News