Select Location
All Locations
State
Region
City / District
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல்..!

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல்..!

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, "வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடநைத்துள்ளேன்.

நேற்று முன்தினம், கோவாவில் குஷ்பு மகள் திருமணத்தில் நாங்கள் சந்தித்தோம். அப்போது ஒன்றாகச் சிரித்து, நகைச்சுவைகளைப் பகிர்ந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். பாக்யராஜ் வாழ்வும் மகிழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தார். இன்று காலை அவரது மறைவுச் செய்தியைக் கேட்டது நம்ப முடியாததாக இருக்கிறது. ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் அருமையான நடிகர், இந்தியத் திரையுலகிற்கு அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். பூர்ணிமா, சாந்தனு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கி கொள்ள இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். என் அன்பு நண்பனே, அமைதியாக இளைப்பாறு" என்று பதிவிட்டுள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News