இயக்குநர் பாக்யராஜ் மறைவு: நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவையொட்டி, நாளை (ஜூன் 28) ஒருநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத் துறையினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜின் மறைவையொட்டி, நாளை (ஜூன் 28) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.