Select Location
All Locations
State
Region
City / District
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் பாடிய நடிகர் சூர்யா!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் பாடிய நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி கூட்டணியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

40 வயதைக் கடந்த நாயகனுக்கும் அவரை விட 20 வயது குறைவான நாயகிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அஞ்சான் திரைப்படத்தில், ‘ஏக் தோ தீன்’ பாடலைச் சூர்யா பாடியிருந்தார். நீண்ட காலம் கழித்து மீண்டும் சூர்யா தன் புதிய படத்தில் பாடியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News