Select Location
All Locations
State
Region
City / District
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் மீது ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில, தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூபாய் 23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவசங்கருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் இளஞ்செழியன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு குறித்து நேரடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி அசோக் நகர் போலீஸார் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


Dinamani 2 hours ago
Home Flash News