Select Location
All Locations
State
Region
City / District
அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி வீடியோ, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி வீடியோ, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ரீல்ஸ், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆய்வு என்ற பெயரில் குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் வீடியோகள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இவ்விதிமுறைகளை மீறிச் சிகிச்சைகளை வீடியோ எடுப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிகிச்சையை அனுமதியின்றி வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்று விருதுநகரில் தவெக நிர்வாகி போலியோ சொட்டு மருந்து செலுத்தி ஆய்வு செய்வது போன்று வீடியோ வைரலான நிலையில் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து இது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை இத்தகைய முன்னெடுப்பை எடுத்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News