Select Location
All Locations
State
Region
City / District
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் அமலுக்கு வந்த செல்போன் தடை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் அமலுக்கு வந்த செல்போன் தடை உத்தரவு!

பிரசிதிப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் எதிரொலியால், கோவிலுக்கு வரும் பக்தர்களை முழு பரிசோதனை செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், கட்டண தரிசன வரிசை மட்டுமின்றி கட்டணமில்லா தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் நவீன இயந்திரங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பரிசோதனையின்போது தடையை மீறி செல்போன்கள் எடுத்து செல்வது தெரிந்தால், அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசனத்திற்கு முன்னதாக, கோவிலில் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Malaimalar 1 hour ago
Home Flash News