Select Location
All Locations
State
Region
City / District
‛ஜனநாயகன் படத்திற்கு ‛ஏ சான்றிதழ்..! உத்தேச வெளியாகும் தேதி அறிவிப்பு..!

‛ஜனநாயகன் படத்திற்கு ‛ஏ சான்றிதழ்..! உத்தேச வெளியாகும் தேதி அறிவிப்பு..!

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜன., 9ம் தேதி படம் வெளியாக வேண்டியது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகவில்லை. சமீபத்தில் தமிழக அரசின் டில்லி பிரதிநிதியாக இந்த படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாண நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாக இரு தினங்களாக செய்திகள் வந்தன. இப்போது அது உறுதியாகி உள்ளது. ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. 

வன்முறை, ஆபாச வார்த்தைகளை குறைக்க, மொத்தம் 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கை வாசகம் வைக்கவும் உத்தரவு. மேலும் சண்டை காட்சிகளில் ரத்தக்கறை, காது அறுபடும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பின் போது கால் பறப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 நொடிகள் வெட்டப்பட்டுள்ளது. 

படத்தின் மொத்த நீளம் 180 நிமிடம், அதாவது 3 மணிநேரம் ஓடும் விதமாக ஜனநாயகன் வெளியாக உள்ளது. தணிக்கை சான்றிதழ் பிரச்னை தீர்ந்ததால் படம் இந்த மாதத்திற்குள் உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனேகமாக ஜூலை 23 அல்லது 30ல் படம் வெளியாக வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Smacy News 5 hours ago
Home Flash News