Select Location
All Locations
State
Region
City / District
கன்னிகைப்பேரில் விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் அமோனியா அகற்றும் பணி 90% நிறைவு

கன்னிகைப்பேரில் விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் அமோனியா அகற்றும் பணி 90% நிறைவு

பெரியபாளையம்: திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் தனி​யார் கடல் உணவு​கள் பதப்​படுத்​தும் தொழிற்​சாலை​யில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​பட்​டனர். இந்த விபத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களில் இது​வரை 18 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 14 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர், 51 பேர் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டனர். இந்த தொழிற்​சாலை​யில் 3 டேங்​கர்​களில் சேமித்து வைக்​கப்​பட்ட 2 டன் அமோனியாவை அகற்​றும் பணி நேற்றுமுன்​தினம் தொடங்​கியது.

வல்​லுனர்​கள் குழு​வினர் பாது​காப்​பாக டேங்​கர் லாரி​யில் அகற்​றினர். இந்த நிலை​யில் டெங்​கர்​களில் மீத​முள்ள அமோனி​யா​வை​யும், தொழிற்​சாலை​யில் பைப்​பு​களில் தேங்​கி​யுள்ள அமோனியா அகற்​றும் பணி​கள் 2-வது நாளாக நேற்று நடை​பெற்​றது. அமோனியா கையாள்​வ​தில் அனுபவம் வாய்ந்த வல்​லுனர்​கள் குழு​வினர் பாது​காப்பு கவச உடைகள் அணிந்து இந்​தப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்​புத்​துறை, மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரி​யம் என பல துறை அதி​காரி​கள் பணி​களை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில் பெரும்​பாலான அமோனியா வெளி​யேற்​றப்​பட்​டு உள்ளதாக​வும், 90 சதவீத அளவுக்கு பணி​கள் நிறைவு​பெற்​றுள்​ள​தாக மாவட்ட நிர்​வாகம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் மீத​முள்ள பணி​கள் நாளை​யும் நடை​பெறும் என்​றும் தற்​போது அகற்​றப்​பட்ட அமோனியா இரவுக்​குள் பாது​காப்​பான இடத்​துக்கு கொண்டு செல்​லப்​படும் என த ரி​வித்​தனர்.

கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயுவை வெளி​யேற்​று​வ​தால் பெரிய​பாளை​யம், மஞ்​சங்​காரணை, கன்​னிகைப்​பேர், ஜனப்​பன் சத்​திரம் பகு​தி​யில் தடுப்​பு​கள் வைத்து பஸ், லாரி போன்ற கனரக வாக​னங்​களை ஆரணி, வெங்​கல் வழி​யாக மாற்​றுப்​பாதை​யில் அனுப்பி வைத்​தனர். 2 நாட்​கள் அந்த பகு​தி​யில் போக்​கு​வரத்து தடை செய்​யப்​பட்ட நிலை​யில் இன்று ஒரு வழி​ பாதை​யில் போக்​கு​வரத்து அனு​ம​திக்​கபடும்​ என தெரிவித்​தனர்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News