Select Location
All Locations
State
Region
City / District
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்

நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மட்​டும் நாடு முழு​வதும் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) தெரி​வித்​துள்​ளது. மாணவர் சேர்க்​கைக் குறைவு, உள்​கட்​டமைப்பு வசதி​யின்மை உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​த​தாவது: நாடு முழு​வதும் மொத்​தம் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​களை முறை​யாக மூடு​வதற்கு நடப்பு கல்வி ஆண்​டில் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. முறை​யான மூடல் என்​பது, அனு​மதி வழங்​கப்​பட்ட அந்த குறிப்​பிட்ட கல்வி ஆண்​டில் முதலா​மாண்டு மாணவர் சேர்க்​கையை அந்​தக் கல்வி நிறு​வனங்​கள் நடத்​தக் கூடாது என்​ப​தாகும். அதே நேரத்​தில், அங்கு ஏற்​க​னவே படித்து வரும் பிற ஆண்டு மாணவர்​கள் தங்​களது படிப்​பைத் தொடர​வும், பட்​டங்​களைப் பெற​வும் எவ்​வித தடை​யும் இருக்​காது.

மூடப்​பட்ட 58 கல்வி நிறு​வனங்​களில், அதி​கபட்​ச​மாக உத்தர பிரதேசம் மற்​றும் மகா​ராஷ்டிரா மாநிலங்​களில் தலா 12 கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ளன. இதற்கு அடுத்​த​படி​யாக மத்​திய பிரதேசத்​தில் 8 கல்​லூரி​களும், தெலங்​கானா மற்​றும் பஞ்​சாபில் தலா 4 கல்​லூரி​களும் மூடப்​பட்​டுள்​ளன. ஆந்​திர பிரதேசம் மற்​றும் ராஜஸ்​தானில் தலா 3 கல்​லூரி​களும்; குஜ​ராத், கர்​நாட​கா, தமிழ்​நாடு ஆகிய மாநிலங்​களில் தலா 2 கல்​லூரி​களும் மூடப்​பட்​டுள்​ளன. ஹரி​யா​னா, ஒடி​சா, உத்​த​ராகண்ட் மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்​களில் தலா ஒரு கல்​லூரி மூடப்​பட்​டுள்​ளது. இந்த 58 நிறு​வனங்​களில், 3 கல்​லூரி​கள் அரசு உதவி பெறும் கல்வி நிறு​வனங்​கள் ஆகும். மீத​முள்​ளவை அனைத்​தும் தனி​யார் சுயநிதி கல்​லூரி​கள் ஆகும். மேலும், இதே கால​கட்​டத்​தில் நாடு முழு​வதும் உள்ள தொழில்​நுட்​பக் கல்​லூரி​களில் வழங்​கப்​பட்டு வந்த 950-க்​கும் மேற்​பட்ட பாடப்​பிரிவு​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.இவ்​வாறு அந்த அதி​காரி தெரி​வித்​தார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News