கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு
சென்னை: கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த 5.7.2026 அன்று காலை பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த டாடா ஏஸ் வாகனம் பின்புறமாக மோதிய விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம். வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சத்யா (வயது 31), செல்வராணி (வயது 58) மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காந்திமதி (வயது 60). ரவிச்சந்திரன் (வயது 58), ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.Rail Freight
இவ்விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உக்கரவேல் (வயது 48), சந்தோஷ் (வயது 37), தேவகி (வயது 50), அஞ்சலை (வயது 60) சதீஷ் (வயது 35), விஜயா (வயது 35), சந்திரகுமார் (வயது 35) ஆகிய ஏழு நபர்களுக்கும் மற்றும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாவாசை (வயது 50) என்பவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.