இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் தொடக்கம்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்னும் 8 நாட்களில் வரவிருக்கிறது. ஜூலை 17-ஆம் தேதி ஹரியானாவில் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. ஹரியானாவில் ஜூலை 17ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து ரயிலை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருமுறை இந்த ரயிலை பயன்படுத்தும் போது 2600-க்கும் மேற்பட்ட பயணிகள் வசதியாக ஏறிச் செல்லலாம். இதில் 1200 கிலோ வாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் புயல் ப்ரொபைல் சிஸ்டம் உள்ளது. இதனால் எரிபொருள் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கும். அதேபோல இந்த ஹைட்ரஜன் ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறமாகிய இரண்டிலும் பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டு அந்த ஹைட்ரஜன் எரி பொருள் வெளியில் அனுப்பப்படும் போது காற்றிலுள்ள ஆக்ஸிஜடன் ரியாக்ட் ஆகி மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் அதன் பின்னர் ரயிலை இயக்கும் சக்கரங்கள் மற்றும் மோட்டார்க்கு அனுப்பப்படுகிறது. பிற வாகனங்களுக்கு எல்லாம் எரிபொருள் நிரப்பிய பின்னர் கார்பன் டை ஆக்சைடு வெளியாகும். ஆனால் இந்த ஹைட்ரஜன் ரயில் மூலம் வெறும் வெப்பம் மற்றும் தண்ணீர் தான் வெளியாகும். அதாவது கரும்புகை எதுவுமே வராது. இதனாலோ என்னவோ ஹைட்ரஜன் எரிபொருளை எதிர்கால எரிபொருள் என்றும் சிலர் அழைக்கின்றனர். இந்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது கார்பன் டை ஆக்சைடு அல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் வெப்பம் வெளியாகும் ஒரு எரிபொருளாக ஹைட்ரஜன் இருப்பதால் இனி வரும் காலங்களில் இந்த ஹைட்ரஜன் ரயில் சேவை இன்னும் அதிகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.