Select Location
All Locations
State
Region
City / District
தமிழ் இருக்கும் இடமெல்லாம் உறைந்து நிற்பான்! சாய் அப்யங்கர் இசையில் அதிரும் ‘தமிழ் முருகன்’ பர்ஸ்ட் லுக் வீடியோ

தமிழ் இருக்கும் இடமெல்லாம் உறைந்து நிற்பான்! சாய் அப்யங்கர் இசையில் அதிரும் ‘தமிழ் முருகன்’ பர்ஸ்ட் லுக் வீடியோ

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருந்தது.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரி விக்ரம், ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. அப்போஸ்டரில் ஒரு போராட்ட களப் பின்னணியில் வேல் மற்றும் சூலம் கலந்த ஒரு ஆயுதம் இடம் பெற்றிருந்தது. இதனால் இப்படம் புராணக் கதையில் கடவுள் முருகனை வைத்து உருவாகுவதாக பேச்சுகள் எழுந்தது. இப்படத்தை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன் மற்றும் நந்தமுரி தாராகா ராமாராவ் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார். இப்படப் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மற்றொரு தெலுங்கு தயாரிப்பாளர் நாகவம்சி, “வடக்கில் பிறந்தவர்... மையப்பகுதியில் உருவாக்கப்பட்டவர்... தெற்கில் வழிபடப்படுபவர்... இப்போது... பிரபஞ்சத்திற்கே உரிய ஒரு காவியமாக மாறவிருக்கும் கதை” எனக் குறிப்பிட்டிருந்தார். முருகனை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் முருகனை வடக்கில் பிறந்தவர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். எழுத்தாளர் அறிவுமதி வசனம் எழுதுகிறார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் Miles To Go நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. முருகனை சுற்றி இப்படி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் சூழலில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் மக்கள் மற்றும் தமிழ் நிலங்களின் நித்திய பாதுகாவலர், போர் வீரர், ராஜா & தலைவர் ’தமிழ் முருகன்’ எனக் குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News